;
Athirady Tamil News

புகழ்பெற்ற பிரான்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாகி பொறுப்பை ஏற்கும் இந்திய பெண்…!!

0

இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த பெண் லீனா நாயர். ஜெம்ஷத்பூரில் உள்ள எக்ஸ்.எல்.ஆர்.ஐ கல்வி நிறுவனத்தில் தனது படிப்பை முடித்த இவர் 1992-ம் ஆண்டில் ஆங்கிலோ-டச்சு எஃப்எம்சிஜி நிறுவனமான யுனிலீவர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.

இவர் பின்னர், அந்நிறுவனத்தின் முதல் பெண் மற்றும் இளைய தலைமை மனித வள அதிகாரியாக பொறுப்பேற்றார். கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்த லீலா நாயர் வரும் ஜனவரி முதல் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து, பிரெஞ்சு சொகுசு பேஷன் ஹவுஸ் சேனலின் உலகளாவிய தலைமை நிர்வாகியாகவும் அவர் பொறுப்பு ஏற்கவுள்ளார்.

“உலகின் புகழ்பெற்ற மற்றும் போற்றப்படும் நிறுவனமான பேஷன் சேனலின் குளோபல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டதில் பணிவும் பெருமையும் அடைகிறேன்” என்று லீனா நாயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து யுனிலீவர் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஜோப் கூறியதாவது:-

கடந்த 30 ஆண்டுகளாக லீனா நாயரின் சிறந்த பங்களிப்பிற்காக அவருக்கு நன்றி கூற விரும்புகிறேன். லீனா யுனிலீவரில் தனது தொழில் வாழ்க்கை முழுவதும் ஒரு முன்னோடியாக இருந்துள்ளார். ஆனால் தலைமை மனித வள அதிகாரியாக இனி தொடரப்போவதில்லை.

லீனா தங்கள் நிறுவன பங்குகளில் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்குதல் நிகழ்ச்சி நிரல், எங்கள் தலைமைத்துவ வளர்ச்சியின் மாற்றம் மற்றும் எதிர்கால வேலைக்கான எங்கள் தயார்நிலை ஆகியவற்றில் ஒரு உந்து சக்தியாக இருந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.