;
Athirady Tamil News

இந்தியாவும், இங்கிலாந்தும் இயற்கையாகவே கூட்டாளிகள்- பிரதமர் போரிஸ் ஜான்சன்…!!

0

மத்திய வெளியுறவு அமைச்சகமும், கார்னகி இந்தியா என்கிற அரசு சாரா அமைப்பும் இணைந்து 6-வது உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக நடத்தியது. இந்த மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

எங்களுடைய பகிரப்பட்ட புதுமை கலாசாரம் மற்றும் எங்களின் தொழில் முனைவு ஆற்றல் ஆகியவற்றின் மூலம் இங்கிலாந்தும், இந்தியாவும் இயற்கையான கூட்டாளிகளாக திகழ்கின்றன. நாங்கள் பல அருமையான திட்டங்களில் ஒன்றாக வேலை செய்கிறோம். வரும் 10 ஆண்டுகளில் இந்தியாவும், இங்கிலாந்தும் ‘2030 இந்தியா-இங்கிலாந்து சாலை வரைபடம்’ திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, தொழில்நுட்பம் மற்றும் பிற பகுதிகளில் தங்கள் பிணைப்பை தொடர்ந்து ஆழப்படுத்தும்.

இவ்வாறு போரிஸ் ஜான்சன் கூறினார்.

கடந்த மே மாதம் இங்கிலாந்து-இந்தியா இடையே காணொலி காட்சி வாயிலாக நடந்த உச்சிமாநாட்டின்போது ‘2030 இந்தியா-இங்கிலாந்து சாலை வரைபடம்’ திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.