;
Athirady Tamil News

சுப்பர்மடம் மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்; வஞானம் சிறிதரன் ஆதரவளித்துள்ளார்.!! (படங்கள், வீடியோ)

0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வருகைதந்து ஆதரவளித்துள்ளார்.

இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும் வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற இந்த போராட்டத்திற்கு பல தரப்பினரும் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் போராட்டத்திற்கு நேற்றைய தினம் இரவு(2) வருகைதந்து ஆதரவளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!! (படங்கள், வீடியோ)

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது.!! (வீடியோ, படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.