;
Athirady Tamil News

மோட்டார் வாகனம் அல்லாதவற்றை பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்தல்!!

0

இலங்கையில் போக்குவரத்து கட்டமைப்பில் மோட்டார் வாகனம் அல்லாதவற்றை பயன்படுத்தும் நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை ஆவணத்திற்கு நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் 5 மில்லியனுக்கும் மேற்பட்ட வாகனங்கள் உண்டு. இது 2000 ஆம் ஆண்டு 3 மடங்காக அதிகரித்திருப்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

விசேடமாக முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் போன்ற தனிநபர் வாகனங்களுக்கான இறக்குமதி அதிகரிப்பே இதற்கான காரணம் என்பது அவதானிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது கொழும்பு உள்ளிட்ட அண்டிய நகரங்களில் காணப்படும் கடும் வாகன நெரிசல் மற்றும் காற்று மாசடைதல் காரணமாக மோட்டர் வாகனங்கள் அல்லாத முறையொன்றை பயன்படுத்துவது பொருத்தமானது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இதனை சுற்றாடல் அமைச்சு மற்றும் அதனுடன் தொடர்புப்பட்ட அமைச்சிக்கு இணைந்த ஏனைய நிறுவகங்களுக்கும் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெகுஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.