;
Athirady Tamil News

உலக சந்தையில் தங்கத்தின் விலை எகிறிய தங்கம் விலை; வரலாறு காணாதளவு உயர்வு!

0

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்றையதினம்(24) வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு அவுன்ஸ் 4,500 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

வெனிசுலாவில் நிலவி வரும் தீவிர அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் இந்த அதிரடி விலையேற்றத்திற்கு முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகின்றன.

முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு சிறந்த சேமிப்பு
உலகளாவிய ரீதியில் நிலவும் இத்தகைய பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமற்ற சூழலால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பொதுவாக வட்டி விகிதங்கள் குறையும் போது அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவடைவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தை ஒரு சிறந்த சேமிப்பு மாற்றாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்த விலை உயர்வு உலக நாடுகள் பலவற்றிலும் ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்

இலங்கையில் தங்கவிலை
இதன் தாக்கம் இலங்கையிலும் தங்கவிலை தொடர்ந்து அதிகரித்து செல்கிறது

அதன்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்து 354,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 327,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,938 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.