வவுனியாவில் கஞ்சா செடி வளர்த்த ஒருவர் கைது!
வவுனியா மடுக்கந்த பகுதியில் காணி ஒன்றில் கஞ்சா செடி ஒன்றை பயிரிட்டு வளர்த்த ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மடுகந்த பகுதியில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரகீத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே கஞ்சா செடி வளர்த்தமை கண்டு பிடிக்கப்பட்டது. இதில் மடுகந்த பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.