;
Athirady Tamil News

யாழ்மாவட்ட சதுரங்க சங்கத்தின் Jaffna District Chess ஏற்பாட்டில் நொர்தேர்ன் செஸ் ப்ரீமியர் லீக் சுற்றுப்போட்டி!! (படங்கள்)

0

யாழ்மாவட்ட சதுரங்க சங்கத்தின் Jaffna District Chess ஏற்பாட்டில் நொர்தேர்ன் செஸ் ப்ரீமியர் லீக் சுற்றுப்போட்டி (NORTHERN CHESS PREMIER LEGUE) நேற்றும் இன்றும், யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் வீதியில் அமைந்துள்ள பூட் களரியில் ( Food Gallery – Jaffna, The Arc Arts Mart) இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணம், கண்டி, காலி மற்றும் கொழும்பில் இருந்து பல சதுரங்க வீர வீராங்கனைகள் இந்த சுற்றுப்போட்டியில் பங்குபற்றியிருந்தார்கள்.

யாழ்மாவட்ட சதுரங்க சங்கத்தின் தலைவர் திரு N. நந்தரூபன் Navam Nanthan தலைமையில் இன்று மாலை பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது. நிகழ்வின் பிரதம விருந்தினராக இந்திய பதில் துணைத்தூதர் திரு ஸ்ரீ வி. ராம் மகேஷ் அவர்களும் விருந்தினராக ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் திரு கே. பாஸ்கரன் அவர்களும் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கிவைத்தார்கள். சுற்றுப்போட்டியின் முதலிடத்தை பெற்ற அணிக்கு ரூபா 100,000/- பணப்பரிசிலும் இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு ரூபா 75,000/- பணப்பரிசிலும் பதக்கங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.