;
Athirady Tamil News

சம்மாந்துறை மலையடிக்கிராமத்தில் பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

0
அம்பாறை மாவட்டம்இ சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையடிக்கிராமம் 02 பகுதியில் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய  நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இஸ்மாயில் ரிஸ்வானா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், உயிரிழந்த குறித்த பெண் கடந்த 20 வருடங்களாக மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நூர்டீன் சர்ஜூனின் உத்தரவுக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மரண விசாரணைகளை முன்னெடுத்தார். இதன்போது, அம்பாறை குற்றவியல் தடயவியல் பிரிவு   பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகைதந்து  விசாரணைகளை மேற்கொண்டனர்.

மரண விசாரணைகளின் பின்னர், உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.