;
Athirady Tamil News

ராஜசேகர ரெட்டியின் மனைவி மகளுக்காக தெலுங்கானாவில் ஆதரவு திரட்டுகிறார்..!!

0

ஆந்திர மாநில முதலமைச்சராக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பிறந்த நாளையொட்டி கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் குண்டூரில் உள்ள நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. இந்த நிலையில் நேற்று காலை கடப்பாவில் இருந்து புலிவேந்தலாவுக்கு ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தாயார் விஜயம்மா மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் ஒரே ஹெலிகாப்டரில் சென்று ராஜசேகர் ரெட்டி விபத்தில் இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினர். அப்போது ஒருவருடன் ஒருவர் பேசாமல் இறுக்கமாக இருந்தனர். ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா அவர்கள் அஞ்சலி செலுத்தி விட்டு சென்ற பிறகு தனது தந்தை இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து விமானம் மூலம் வந்து ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவர் தாயார் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் ஒய். எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கூட்டத்திலிருந்து புறப்பட்டு சென்றார். ஜெகன்மோகன் ரெட்டி ஜெயிலில் இருந்த போது அவருக்காக நானும் எனது மகள் சர்மிளாவும் பாத யாத்திரை சென்று ஆதரவு திரட்டினோம். ஆட்சிக்கு வந்த பிறகு ஜெகன்மோகன் அவரது தங்கைக்கு எந்த பதவியும் தராமல் ஒதுக்கி வைத்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த ஷர்மிளா தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் என்ற பெயரில் புதியதாக கட்சியை தொடங்கியுள்ளார். அவருக்கு ஆதரவு திரட்டுவதற்காக அவருடன் சேர்ந்து தெலுங்கானாவில் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளோம். எனவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார். தங்கையின் திருமணத்தின் போது அவருக்கு செய்யவேண்டிய அனைத்தும் செய்து விட்டோம். தங்கை என்பதற்காக அவருக்கு கட்சிப் பதவி தர இயலாது என்றார். இதையடுத்து கட்சி கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பதவியை ராஜினாமா செய்த விஜயம்மா தனது மகள் ஷர்மிளாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக தெலுங்கானாவில் களம் இறங்குகிறார். இதற்காக அவர் தன்னை தயார்படுத்தி வருகிறார் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.