;
Athirady Tamil News

அமைச்சர் ரோஜா மீது தொகுதி மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர்- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு..!!

0

ஆந்திராவில் வரவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அன்னமய்யா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் பொது கூட்டங்களை நடத்தி ஆதரவு திரட்டி வருகிறார். கடந்த 2019 தேர்தல் தோல்விக்குப் பிறகு, எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. மதனப்பள்ளி சித்தூர் ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பை காட்டிலும் மிக பிரமாண்டமாக 2 லட்சம் பேர் கலந்து கொண்டனர். தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டங்களில் ஏராளமாேனார் கலந்து வருவது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல், சுற்றுலாத்துறை அமைச்சரும், உள்ளூர் எம்.எல்.ஏ.வுமான ரோஜாவின் கோட்டையான நகரியிலும் சந்திர பாபு நாயுடுவின் பொது கூட்டத்தில் ஏராளமாேனார் கலந்து கொண்டது ஆளுங்கட்சிக்கும் மற்றும் அமைச்சர் ரோஜாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. துணை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் சொந்த ஊரான கார்வேட்டி நகரத்தில் இருந்து அவரது ஆதரவாளர்கள் திரளானோர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் அமைச்சராக உள்ள ரோஜா நகரியை திருப்பதி மாவட்டத்துடன் இணைக்காததால் மக்கள் ஆத்திரத்தில் உள்ளனர். ஆந்திராவில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெறும் என்று சந்திர பாபு நாயுடு புத்தூரில் நடந்த கூட்டத்தில் பேசியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.