இலங்கையின் மேலைத்தேய இசையை அலங்கரித்த மெக்சி ரொசைரோ காலமானார்
5 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் மேலைத்தேய இசைத்துறையை தனது தனித்துவமான குரலால் அலங்கரித்த மூத்த கலைஞர் மெக்சி ரொசைரோ (Maxi Rozairo), தனது 77ஆவது வயதில் காலமானார்.
ஐந்து தசாப்தங்களுக்கும் (50 ஆண்டுகள்) மேலாக இசைத்துறையில் ஈடு இணையற்ற பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார்.
அவரது தனித்துவமான பாடும் பாணி மற்றும் மேடை ஆற்றுகை காரணமாக அவர் இலங்கையின் இசை ரசிகர்களிடையே பெரும் புகழ்பெற்றார்.
இலங்கையில் மேலைத்தேய இசைக்கலையை வளர்ப்பதிலும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதிலும் அவர் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்துள்ளார்.