;
Athirady Tamil News

அடவிநயினார் அணை நீர்மட்டம் உயர்வு..!!

0

தென்காசி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தப்படி ஜூன் மாதம் தொடங்காத நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று கடையநல்லூர், அச்சன்புதூர், மேக்கரை, பண்பொழி, சொக்கம்பட்டி, இடைகால், கருப்பாநதி, அடவிநயினார் அணை ஆகிய பகுதிகளில் விட்டு விட்டு பலத்த காற்று வீசுவதோடு சாரல் மழையும் பெய்தது. இதன் காரணமாக அணைகளில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. 132 அடி முழு கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் கடந்த 2 நாட்களில் 16 அடி உயர்ந்து 75 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 70 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறத. 5 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கருப்பாநதி அணைப்பகுதியில் பெய்த மழையால் கடந்த 2 நாளில் அணையின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து தற்போது 36 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 180 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 5 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.