;
Athirady Tamil News

5ஜி அலைக்கற்றை உரிமத்தை கைப்பற்றிய ஜியோ..!!

0

இந்தியாவில் தொலைபேசி சேவைகளுக்கான 5ஜி அலைக்கற்றை ஏலம், இன்றுடன் ஒருவாரத்தை கடந்துவிட்டது. இந்த நிலையில், 7 நாட்களாக நடைபெற்ற ஏலம் இன்று பிற்பகல் முடிவுக்கு வந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாரத் ஏா்டெல், வோடபோன் மற்றும் உலக முன்னணி பணக்காரரான கவுதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இந்தநிலையில் கடந்த 5 நாட்களில் 30 சுற்று ஏலம் முடிந்துவிட்டதாக மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். முதல் நாள் ஏலத்தில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரை ஏலம் கேட்கப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்து இருந்தது. நேற்று 2-ஆம் நாள் முடிவில் இந்த தொகை ரூ.1,49,454 கோடி வரை கேட்கப்பட்டது. அதை தொடந்து 3-வது நாள் முடிவில் இந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் ரூ.1,49,623 கோடியை எட்டியது. நான்காம் நாள் ஏலத்தின் முடிவில், 23 சுற்றுகள் நடைபெற்ற ஏலத்தில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 855 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாம் நாள் ஏலத்தின் முடிவில், 30 சுற்றுகள் நடைபெற்ற ஏலத்தில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 967 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. . இன்னும் முடிவு எட்டப்படாததால் 6-வது நாள் ஏலம் நடைபெற்றது.அதில் 37 சுற்றுகள் முடிவில் ஏலத்தொகை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 130 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் முடிவு எட்டப்படாததால் 7-வது நாள் ஏலம் இன்று தொடர்ந்தது. அதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி தொகைக்கு 5ஜி அலைக்கற்றை உரிமம் விற்கப்பட்ட்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சரியான தொகை குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி உரிமம் பெற அதிகபட்ச டெபாசிட் தொகையாக ரூ.14 ஆயிரம் கோடியை ரிலையன்ஸ் ஜியோ கொடுத்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பார்தி ஏா்டெல் ரூ.5500 கோடியை டெபாசிட் செய்துள்ளது. இதன் அடிப்படையில், தகுதி புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்துக்கு 1,59,830 புள்ளிகள் ஏலத்துக்காக அளிக்கப்பட்டுள்ளன. பார்தி ஏா்டெல்க்கு 66,330 புள்ளிகளும், வோடபோன் – ஐடியா லிமிடெட்க்கு 29,370 புள்ளிகளும், அதானி டேட்டா-வொர்க்ஸ் லிமிடெட்க்கு 1,650 புள்ளிகளும் ஏலத்துக்காக அளிக்கப்பட்டுள்ளன. அதிக தொகை கொடுத்து 5ஜி உரிமத்தை கைப்பற்றிய ஜியோ, 700 மெகாஹெர்ட்ஸ், 800 மெகாஹெர்ட்ஸ், 1800 மெகாஹெர்ட்ஸ், 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை ஜியோ கைப்பற்றியது. 20 ஆண்டுகளுக்கு, மேற்கூறிய தொழில்நுட்ப 5ஜி அலைவரிசையைப் பயன்படுத்துவதற்கான உரிமையைப் பெறுவதற்கான மொத்தச் செலவு ரூ.88,078 கோடி. ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் விதிமுறைகளின்படி, ஸ்பெக்ட்ரம் தொகையை 20 வருடாந்திர தவணையாக கட்டவேண்டும், இதற்கான வட்டி ஆண்டுக்கு 7.2 சதவீதமாக கணக்கிடப்படுகிறது. எங்கள் பைபர் நெட்வொர்க் மற்றும் உள்நாட்டு தொழில்நுட்ப தளங்கள் மூலம், எல்லா இடங்களிலும் 5ஜி மற்றும் அனைவருக்கும் 5ஜி வழங்க எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.