;
Athirady Tamil News

புங்குடுதீவு துரைச்சுவாமி பாடசாலையில் சிரமதானம்!! (படங்கள் இணைப்பு)

0

புங்குடுதீவு துரைச்சுவாமி பாடசாலையில் சிரமதானம் ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு சேர் துரைச்சுவாமி ஆரம்ப பாடசாலையின் மைதானம் , சுற்றுப்புற வீதி , பாடசாலையின் உள்ளக காணி என்பன பாடசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளரும் , வேலணை பிரதேச சபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் தனிப்பட்ட நிதியுதவியின் மூலம் சிரமதானப்பணியூடாக சீரமைக்கப்பட்டன .

நீண்டகாலமாகவே பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் பிறிதொரு இடத்திலேயே நடைபெற்றுவந்தன . பாடசாலைக்கு அருகிலுள்ள காணியின் உரிமையாளர் அக்காணியை பாடசாலைக்கு மைதானம் அமைக்கும் நோக்கில் நன்கொடையாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது .

இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை அக்காணியிலேயே நடாத்தும் நோக்கில் மேற்படி காணியை சுத்தம் செய்து தருமாறு பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலனை பாடசாலை நிர்வாகத்தினர் கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.