;
Athirady Tamil News

புதிதாக பதவியேற்ற 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி – அரசாங்க அதிபர் சந்திப்பு

0
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் புதிய மதுபான சாலைக்கு வழங்கிய அனுமதியை இரத்து செய்ய கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சங்கானை பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம்  வெள்ளிக்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் முடிவில் சங்கானை பிரதேச செயலகத்திற்கு சென்று பிரதேச செயலரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில், சங்கானை , கோப்பாய் , தெல்லிப்பழை மற்றும் கரவெட்டி ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் தலா ஒன்று என்ற அடிப்படையில் புதிதாக நான்கு மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட காங்கேசதுறை பகுதியில் கொடுக்கப்பட்ட மதுபான சாலைக்கான அனுமதியை இரத்து செய்ய கோரி  தெல்லிப்பழை சந்தியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்று பிரதேச செயலரிடம் மகஜர் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 
You might also like

Leave A Reply

Your email address will not be published.