;
Athirady Tamil News

ஸ்மித் மச்சாரை பாராட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

0

துபாயில் இருந்து இஸ்ரேல் சென்ற பயணிகள் விமானத்தை அதன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி கடத்த முயன்றதை, இந்திய விமானி ஸ்மித் மச்சார் வீரத்துடன் தடுத்தார். பயணிகள் உதவியுடன் துணை விமானி மடக்கிப் பிடிக் கப்பட்டார். தாக்குதலில் படுகாயமடைந்து ஸ்மித் மச்சார், தற்போது அபுதாபியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சூழலில், ஸ்மித் மச்சாரைப் பாராட்டி அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபை யில் ஜோஷ் காட்ஹைமர், டான் பேகன், மைக்கேல் மெக்கால் ஆகிய எம்.பி.க்கள் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

விமானப்பயணிகளின் உயிரைக் காக்க ஸ்மித் மச்சார் காட்டிய அசாதாரண தைரியத்துக்கு இந்த தீர்மானம் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தை பயங்கரவாத செயலாக கண்டித்துள்ள அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசுகள் இவ்விவகாரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்கள் ஸ்மித் மச்சாரின் துணிச்சலான செயலுக்கு பாராட்டு தெரிவித் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.