;
Athirady Tamil News

ஈபிடிபியிடம் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனிதாபிமான உதவி!

0

ஈபிடிபியிடம் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனிதாபிமான உதவி!

இன அழிப்பு யுத்தம் நடைபெற்ற 2006 ஆம் ஆண்டு காலப்குதியில் புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் வாழ்ந்து வந்த தனது மூன்று ஆண் பிள்ளைகளையும் சிறீலங்கா கடற்படையினரும் அவர்களோடு இணைந்து செயற்படுகின்ற துணை இராணுவக் குழுவான ஈபிடியும் இணைந்து எந்தவொரு காரணங்களும் கூறாது கடத்திச் சென்றதாகவும் தனது கணவரும் இயற்கை எய்திய பின்னர் , அநாதர வறுமையில் பிடியில் சிக்கி வாழ்ந்துவருவதாகவும் அண்மையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பேரணியில் கலந்துகொண்ட பெண்மணியொருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

புங்குடுதீவில் வசித்து வரும் குறித்த பெண்மணி , நீண்ட காலமாகத் தனது பிள்ளைகளைத் தேடி நீதிக்காகப் போராடி வருகின்றார். குறிப்பாக அவரது மகன்களிலொருவர் 16 வயதைக்கூட கடந்திருக்கவில்லை. எவ்விதக் குற்றமும் செய்யாத தனது மூன்று ஆண்பிள்ளைகளையும், ஈபிடிபி (EPDP) அமைப்பைச் சேர்ந்த ‘கெனடி’ எனப்படும் நெடுந்தீவு பத்மநாதன் என்பவரும் இன்னும் சில ஈபிடிபி உறுப்பினர்களும் சிறீலங்கா கடற்படையினருடன் இணைந்து இரவு 10.30 மணியளவில் ஆயுத முனையில் பவள் கவசவாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றதாகப் பாதிக்கப்பட்ட காணொளி ஊடாக ஊடாகக் கண்ணீர் மல்கக் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

பிள்ளைகளையும் கணவரையும் இழந்து, திக்கற்ற நிலையில் வறுமையின் பிடியில் வாழ்வாதாரமின்றித் தவித்து வந்த குறித்த பெண்மணியின் துன்ப நிலை குறித்து தமிழ்த்தேசிய பேரவையின் பிரமுகரும், ஜனநாயக தமிழரசு கட்சியின் பிரதிச் செயலாளருமான திரு. கருணாகரன் நாவலன் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா அவர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

அதற்கமைய தமிழ்த்தேசிய பேரவையின் இணைத்தலைவரும் ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவருமான திரு.கே.வி. தவராசா அவர்களின் ரூபாய் 50000 நிதிப் பங்களிப்பின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதார பாதுகாப்பு பொருட்கள் இன்றைய தினம் குறித்த பெண்மணியின் இல்லத்திற்கு நேரில் சென்று வழங்கி வைக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.