;
Athirady Tamil News

இங்கிலாந்தில் நவீன அடிமைத்தனம் இந்திய மாணவர்களை துன்புறுத்திய 5 பேர் கைது!!

0

இங்கிலாந்தில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள் பகுதி நேரம் வேலை செய்கின்றனர். தற்போது பிரதமர் ரிஷி சுனக், சர்வதேச மாணவர்கள் நீண்ட நேரம் வேலை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இதில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பலர் பயனடைந்து வருகின்றனர். தற்போது, இந்தியாவை சேர்ந்த 50 மாணவர்களை அலெக்சா கேர் என்ற நிறுவனம் பல்வேறு வேலைகளில் அமர்த்தியுள்ளது. கடந்த 14 மாதங்களாக அவர்களுக்கு சம்பளம், போதிய உணவு எதுவும் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது அந்த நாட்டில் நடக்கும் நவீன அடிமைத்தனம் என விமர்சனம் எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கேரளாவை சேர்ந்த மேத்யூ ஐசக், அவரது மனைவி ஜினு செரியன்,எல்டோஸ் செரியன்,எல்டாஸ் குரியச்சன்,ஜேக்கப் லிஜூ ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் 5 பேர் மீது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு எதிராக கிரிமினல் குற்றசாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதில், 50 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படும் என நிலையில் இதுபோன்று யாராவது பாதிக்கப்பட்டால் இந்திய தூதரகத்தை அணுகலாம் என்று தூதரக அதிகாரி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.