;
Athirady Tamil News

கேரள மாநிலத்தில் நீண்ட காலம் பதவி வகித்த முதல்-மந்திரிகள் பட்டியலில் பினராயி விஜயனுக்கு 4-வது இடம்!!

0

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பினராயி விஜயன், 2021-ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் கேரளாவில் அதிக காலம் முதல்-மந்திரி பதவி வகித்தவர்களில் பினராயி விஜயன் 4-வது இடத்தில் இருப்பதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் இதுவரை 12 பேர் முதல்-மந்திரிகளாக பதவி வகித்து உள்ளனர். இவர்களில் நீண்ட காலம் பதவி வகித்த முதல் மந்திரிகளில் ஈ.கே. நாயனார் முதல் இடத்தில் உள்ளார். இவர் 10 ஆண்டுகள் 353 நாட்கள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். 2-வது இடத்தில் கே.கருணாகரன் உள்ளார். இவர் 8 ஆண்டுகள் 315 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். 3-வது இடத்தில் அச்சுதாமேனன் 7 ஆண்டுகள் 80 நாட்கள் பதவி வகித்துள்ளார். இப்போதைய முதல்-மந்திரி பினராயி விஜயன் 6 ஆண்டுகள் 268 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். உம்மன் சாண்டி 6 ஆண்டுகள் 256 நாட்கள் பதவியில் இருந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.