;
Athirady Tamil News

புதுவை அரசு உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்-வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்!!

0

புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுவையின் அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமம் மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. புதுவையிலும் பல அரசு மற்றும் தனியார் காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் சில காப்பகங்கள் அனுமதியின்றி லாப நோக்கோடு செயல்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்ப்பவர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்பட்டாலும், முதியோருக்கு உரிய சிகிச்சை, அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

புதுவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்டு மீட்கப்படும் சிறுமிகள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு மீட்கப்பட்ட இளம்பெண்கள் பலர் இதுபோன்ற காப்பகங்களில்தான் தங்க வைக்கப்படுகி ன்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பும், மறு வாழ்வுக்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறதா? என்ற சந்தேகம் நிலவுகிறது. புதுவையில் ஒவ்வொரு சிக்னல்களிலும் பச்சிளம் குழந்தைகளுடன் யாசகம் பெற இளம் பெண்களும், முதியோரும் கையேந்தி நிற்பது மிகவும் கொடுமையானது.

புதுவை மாநிலத்தில் உள்ள காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆசிரமங்கள், சிறுவர் இல்லங்களை அரசு அதிகாரிகள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோரை அரசு காப்பகங்களில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும்.

சிக்னல்தோறும் யாசகம் பெறுவோரை தடுத்து நிறுத்தி புதுவையை சீர்மிகு நகரமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி செயல்படும் காப்பகம், ஆசிரமம், இல்லங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து ஆதரவற்றோருக்கு தேவை யான அரவணைப்பை அளிக்க வேண்டும் இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.