;
Athirady Tamil News

யாழ்ப்பாண தையிட்டி விஹாரை விவகாரம்; ஆராய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

0

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக மக்களின் காணியை அபகரித்து கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விஹாரை அமைந்துள்ள காணியின் உரித்து தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தலையீட்டுடன் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, புத்தசாசன, மத மற்றும் கலாசார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்.

சுமூகமாகத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையீடு
அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நீதியான தீர்மானத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தையிட்டி விஹாரை அமைந்துள்ள காணி தொடர்பான சர்ச்சை தற்போது தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தலையீடு செய்துள்ளதாகவும் புத்தசாசன, மத மற்றும் கலாசார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.