;
Athirady Tamil News

உ.பி.யில் சோகம் – கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டிடம் இடிந்து விழுந்து 2 பேர் பலி!!

0

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள லோனி நகரின் ரூப் நகர் பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் ஒரு தொழிற்சாலையின் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். கட்டிடம் இடிந்து விழுந்தபோது 10 முதல் 15 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர்.

இதுவரை 10 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என போலீசார் கூறினர். தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவ இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.