;
Athirady Tamil News

முத்தத்தால் கின்னஸ் உலக சாதனை படைத்த தம்பதி

0

பிரேசில் நாட்டில் மருத்துவ தம்பதியினர் ஒருவருக்கொருவர் 30 வினாடிகளில் 195 முத்தங்கள் கொடுத்து கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

பிரேசிலின் சாவோ பாலோ நகரைச் சேர்ந்த தம்பதியினர் ரெனாடோ மற்றும் நையாரா ஆகிய இருவரும் மருத்துவத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.

30 வினாடிகளில் 195 முறை முத்தங்கள்
இவர்கள் இருவரும் வெறும் 30 வினாடிகளில் 195 முறை ஒருவருக்கொருவர் முத்தமிட்டு உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். இவர்களில் ரெனாடோவுக்கு ‘ஏடிஎச்டி’ எனப்படும் கவனக்குறைவு மற்றும் மிகையான செயல்பாட்டுக் குறைபாடு பாதிப்பு உள்ளது.

இருப்பினும், முறையான பயிற்சியும் தீவிர மன உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கவே இந்த முயற்சியை மேற்கொண்டதாக தம்பதியினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் இருவரும் உலகின் மிகச்சிறந்த தம்பதி என்பதை உலகிற்கு காட்ட நினைத்த இவர்களின் இந்த முயற்சி, தற்போது அதிகாரப்பூர்வ கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளனர். இணையத்தில் இவர்களின் சாதனை வீடியோ தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.