;
Athirady Tamil News

ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே திருமண வயது நிர்ணயிக்க கோரிய மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்!!

0

சுப்ரீம் கோர்ட்டில் அஸ்வினி குமார் உபாத்தியாயா தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- திருமணம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் இருக்க வேண்டும் என்று பல்வேறு சட்டங்கள் கூறுகின்றன. பாலின நீதி, பாலின சமத்துவம் பெண்களின் கவுரவம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும். அதற்கு இரு பாலருக்கும் ஒரே மாதிரியான குறைந்தபட்ச திருமண வயது இருக்க வேண்டும். இது தொடர்பான விவகாரத்தில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஐகோர்ட்டுகளில் இருந்து இரு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும். இ்வ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது, மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தை பாராளுமன்றத்திடம் விட்டு விட வேண்டும். சட்டத்தை இங்கு இயற்ற முடியாது. அரசியலமைப்பு சாசனத்தின் ஒரே பாதுகாவலர் சுப்ரீம் கோர்ட்டு என நினைக்கக் கூடாது. நாடாளுமன்றமும் அரசியல் சாசனத்தில் பாதுகாவலர்தான்’ என தெரிவித்து பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.