;
Athirady Tamil News

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியான டோர்கும் எல்லையை மூடியதால் நீண்ட வரிசையில் அணிவகுத்துள்ள லாரிகள் !!

0

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியான டோர்கும் மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சிக்கிக்கொண்டன. இரு தரப்பு அதிகாரிகளும் ஒரு தீர்வைத் தர முயற்சிப்பதால் வணிகங்கள் நஷ்டத்தை எதிர்கொள்கின்றன. ஞாயிற்றுக்கிழமை தலிபான் அதிகாரிகள் பாகிஸ்தானுக்கும் நிலத்தால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கும் இடையே பயணிகள் மற்றும் சரக்குகளுக்கான முக்கிய போக்குவரத்து இடமான டோர்காமை மூடிவிட்டனர்.

அங்கு சுமார் 6000க்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. ஆப்கானிஸ்தான் மக்கள் பாகிஸ்தானில் சிகிச்சை பெற போக்குவரத்துக்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்ற உறுதிமொழியை அந்நாட்டு அரசு நிறைவேற்றவில்லை எனவும் கூறி தலிபான் அரசு எல்லையை முடியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையேயான எல்லைக் கடப்பை மூடுவதால் இரு நாட்டு வர்த்தகர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தனது பெரும்பாலான தேவைகளுக்கு பாகிஸ்தானில் இருந்து பொருட்களை நம்பியிருப்பதாகவும் தெரியப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக வழியில் லாரிகள் தேங்கி நிற்பதால், வியாபாரிகள் மற்றும் குறிப்பாக பழங்கள், காய்கறிகள் போன்ற புதிய உணவுப் பொருட்களை வழங்குபவர்கள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். திங்கள்கிழமை காலை டோர்காம் எல்லைப் பகுதிக்கு அருகே கடுமையான துப்பாக்கிச் சூடு நடந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர், ஆனால் தலிபான் அதிகாரி எந்த மோதல்களையும் மறுத்து, நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.