யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த தேங்காய் ; துயரில் கதறும் உறவுகள்
யாழில் தலையில் தேங்காய் விழுந்ததால் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கோப்பாய் வடக்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மரண விசாரணை
இவர் கடந்த 12ஆம் திகதி கொக்கத்தடி மூலம் தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்கியபோது தோங்காய் அவரது தலை மீது விழுந்துள்ளது. இந்நிலையில் அவர் தனது மனைவியிடம் விடயத்தை கூறியுள்ளார்.
அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.