;
Athirady Tamil News

இஸ்ரேலில் சுற்றுலா பயணிகள் மீது காரை ஏற்றி தாக்குதல்- பயங்கரவாதி சுட்டுக்கொலை!!

0

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெருசேலத்தில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகைக்கு கூடியிருந்த முஸ்லீம்கள் மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பாலஸ்தீன பயங்கரவாத குழுக்கள் இஸ்ரேலை நோக்கி சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் படையினர் காசா நகரத்தின் மீதும், அண்டை நாடான தெற்கு லெபனானிலும் வான்வெளி தாக்குதலை நடத்தியது. குண்டுகளை வீசியதால் காசா நகர கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த நிலையில் மேற்கு கரை பகுதியில் காரில் சென்று கொண்டு இருந்த 2 பெண்களை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

இதனால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த பதற்றத்திற்கு மத்தியில் இஸ்ரேல் டெல்அவிவ் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.அங்குள்ள காப்மண் கடற்கரை பகுதி சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. தினமும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். நேற்று இந்த கடலோர பகுதியில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் நடந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த கார் சுற்றுலா பயணிகள் கூட்டத்தில் புகுந்தது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது பற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் மீது காரை ஏற்றிய மர்ம நபரை பிடிக்க முயன்றனர். அப்போது அவன் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதையடுத்து போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர். விசாரணையில் அவன் பயங்கரவாத கும்பலை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. சுற்றுலா பயணிகள் மீது அவன் அதிவேகமாக காரை ஏற்றி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவலும் தெரியவந்தது. இந்த சம்பவம் இஸ்ரேலில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.