;
Athirady Tamil News

இந்தியாவில் 13 சதவீத மக்கள் நீரிழிவு விழித்திரை நோய் அபாயத்தில் உள்ளனர்!!

0

இந்தியாவில் உணவு முறை மாற்றம், போதிய உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் 40 வயதுக்கு மேற்பட்ட சுமார் 30 லட்சம் பேர் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயால் பார்வையிழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று தி லான் செட்டில் வெளியிடப்பட்ட அகில இந்திய ஆய்வு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கேரள மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மக்கள்தொகையில் 13 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் விழித்திரை பாதிக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள். இது ஒரு மைக்ரோ வாஸ்குலர் சிக்கலாகும். இது பார்வைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நீரிழிவு விழித்திரை நோயாக மாறலாம். 4 சதவீத மக்கள்தொகையில், சிகிச்சை அளிக்கப்படாத நீரிழிவு விழித்திரை நோயின் விளைவாக, மீளக்கூடிய பார்வை இழப்பு உள்ளது. நீரிழிவு விழித்திரை நோய் மற்றும் பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும் வகையில் பரவலான தேசிய மற்றும் துணை தேசிய மதிப்பீடுகளைப் புரிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இது பார்வையிழப்பு தன்மையின் விகிதத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்யும். நீரிழிவு விழித்திரை என்பது நீரிழிவு நோயின் பொதுவாக சிக்கலாகவே உள்ளது. அத்துடன் பார்வை குறைபாட்டிற்கான பொதுவான காரணமாகவும் பார்க்கப்படுகிறது. 10 இந்திய மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 2018 மற்றும் மார்ச் 2020-க்கு இடையில் 40 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சிக்கலான கிளஸ்டர் மாதிரி வடிவமைப்பைப் பயன்படுத்தி, நீரிழிவு விழித்திரை தொடர்பான ஸ்கிரீனிங் ஆய்வை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இதில் ஏறக்குறைய 42,146 பங்கேற்பாளர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.

அவர்களில் 19 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. தொற்றா நோய்கள் மற்றும் காயங்கள் ஆகியவற்றால் ஏற்படும் நோய்களுக்கு எதிராகவும், தாய் வழி, பிறந்த குழந்தை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு எதிராகவும் நீரிழிவு விழித்திரை நோய் நகர்ப்புற மற்றும் கிராமப்புற குடியிருப்புகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் எதுவும் இல்லை என்று ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 19 சதவீதம் பேரில், 78 சதவீதம் விழித்திரைப் பாதிப்பு அதிகரித்துள்ளது. இது பொதுவான காரணமாக இருந்தாலும் நோயின் பிற்பகுதியில் பார்வை பாதிக்கப்படும். எனவே விழித்திரை கேமராக்களைப் பயன்படுத்தி விழித்திரையைத் தவறாமல் கண்காணிக்க வேண்டும்.

அறியப்பட்ட நீரிழிவு நோய் உள்ளவர்களில், குறைந்த சமூக மக்கள் தொகை குறியீடு மற்றும் தொற்று நோயியியல் மாற்றம் நிலை உள்ள மாநிலங்களில் பரவல் கணிசமாகக் குறைவாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நீரிழிவு விழித்திரை பாதிப்பு காரணமாக குருட்டுத்தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பார்வை அச்சுறுத்தல் தொடர்பாக உடனடியாக பரிசோதித்து சிகிச்சை அளிப்பதில் கண் ஆரோக்கியம் குறித்த தேசிய கொள்கையின் அவசர தேவையாக உள்ளது. குருட்டுத்தன்மை, பார்வை குறைபாடு மற்றும் ஆயுஷ்மான் பாரத் ஆகியவை தேசியத் திட்டமாக, நீரிழிவு விழித்திரை சிகிச்சையை தேசிய முன்னுரிமையாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கிரிதர் கண் நிறுவனத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் கிரிதர் அனந்தராமன் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.