;
Athirady Tamil News

கனேடிய பாட்டிக்கு தேடிவந்த அதிஷ்டம் – ஒரே நாளில் கோடிக்கணக்கான பணம் !!

0

கனடாவின் நோர்த் யோர்க் பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பெருந்தொகை பணப்பரிசு வென்றுள்ளார்.

ஸியோமின் ஹான் என்ற பெண்ணே 6/49 லொட்டோ சீட்டிலுப்பில் ஜாக்பொட் வென்றுள்ளார்.

இந்தப் பெண் லொத்தர் சீட்டிலுப்பில் 10.6 மில்லியன் டொலர் பணப்பரிசினை வென்றுள்ளார்.

பரிசு வென்றெடுக்கப்பட்டதனை தம்மால் நம்ப முடியாது போனதாகவும் அதனால் சகோதரியை தொடர்பு கொண்டு வெற்றி இலக்கங்களை சரிபார்த்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வீடு, கார் என்பனவற்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் ஐரோப்பா முழுவதிலும் பயணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் தொடர்ச்சியாக லொத்தர் சீட்டிலுப்பில் பங்கேற்பது கிடையாது எனவும் சில ஆண்டுகளாக இடைக்கிடை விளையாடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னைப் போன்றே எவருக்கு வேண்டுமானாலும் அதிர்ஸ்டம் கிட்டலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.