ரூபாயின் பெறுமதி மேலும் உயர்ந்தது !!
இந்த வருடத்தின் மே மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி வரை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 18.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காலகட்டத்தில், இலங்கை ரூபாயின் பெறுமதி பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 299 ரூபாய் 71 சதமாகவும் விற்பனை விலை 313 ரூபாய் 82 சதமாகவும் பதிவாகியுள்ளது.