19 வயது கர்ப்பிணிப் பெண்ணிடம் 96 கசிப்பு போத்தல்கள்
நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் பஸ் ஊழியர்களுக்கு கசிப்பு விற்பனை செய்ததாக கூறப்படும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் வென்னப்புவை பொலிஸாரால் சனிக்கிழமை (20) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரான கர்ப்பிணிப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் புத்தளம் வென்னப்புவை வைக்கால் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஆவார்.
சந்தேக நபரான கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்து 96 கசிப்பு போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.