;
Athirady Tamil News

சர்வதேச பயணங்களைத் தவிர்க்க ஊழியர்களுக்கு அறிவுறுத்திய கூகிள்: வெளியான காரணம்

0

தூதரகங்களில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக, அமெரிக்க விசா வைத்திருக்கும் சில ஊழியர்கள் சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கூகிள் அறிவுறுத்தியுள்ளது.

வெளியேற வேண்டாம்
இது தொடர்பில் ஊழியர்களுக்கு கூகிள் அனுப்பியுள்ள மின்னஞ்சலை மேற்கோள் காட்டியுள்ளனர். குறித்த மின்னஞ்சலில், அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழைவதற்கு விசா முத்திரை தேவைப்படும் ஊழியர்கள், விசா செயலாக்க நேரம் நீடித்துள்ளதால் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சில அமெரிக்கத் தூதரகங்களிலும் துணைத் தூதரகங்களிலும் விசா சந்திப்புகளுக்கு 12 மாதங்கள் வரை தாமதம் ஏற்படுகிறது. இதனால், சர்வதேசப் பயணம் முன்னெடுப்பது அமெரிக்காவிற்கு வெளியே நீண்ட காலம் தங்கியிருக்க நேரிடும் என்ற அபாயத்தை ஏற்படுத்தும் என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இந்த மாதம், உயர் திறமை வாய்ந்த தொழிலாளர்களுக்கான எச்-1பி விசா விண்ணப்பதாரர்களைக் கடுமையாகச் சரிபார்க்கும் நடைமுறையை அறிவித்துள்ளது. இதில் சமூக ஊடகக் கணக்குகளைச் சரிபார்ப்பதும் அடங்கும்.

கடுமையாக அறிவுறுத்தியது
இந்த நிலையில், இந்தியா மற்றும் சீனாவிலிருந்து திறமையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அமெரிக்க தொழில்நுட்பத் துறையால் பரவலாகப் பயன்படுத்தப்படும் H-1B விசா திட்டமானது, இந்த ஆண்டு புதிய விண்ணப்பங்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் 100,000 டொலர் கட்டணத்தை விதித்ததைத் தொடர்ந்து கடும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

செப்டம்பர் மாதத்தில், கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், தனது ஊழியர்களை சர்வதேசப் பயணங்களைத் தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தியதுடன், H-1B விசா வைத்திருப்பவர்களை அமெரிக்காவிலேயே தங்கியிருக்குமாறு வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.