;
Athirady Tamil News

மேற்குலகம் நெருப்புடன் விளையாடுகிறது – எச்சரிக்கும் ரஷ்யா..!

0

உக்ரைனுக்கு F-16 போர் விமானங்களை வழங்க ஒப்புக்கொண்டதன் மூலம் மேற்குலகம் ‘நெருப்புடன் விளையாடுகிறது’ என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்துள்ளார்.

தென்கிழக்கு உக்ரைனில் முற்றுகையிடப்பட்ட நகரமான பாக்முட்டைச் சுற்றி போர் தணிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரேனின் இராணுவ உளவுத்துறை கட்டுப்பாட்டில் தென்கிழக்கில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தில் பெரிய அளவிலான தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிட்டு வருகிறது என்றும் உக்ரேனிய எதிர் தாக்குதலை சீர்குலைக்கும் நோக்கத்துடன் உள்ளது என்றும் உக்ரைன் தரப்புகளில் செய்தி வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்திற்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கெலின், “ரஷ்யாவிடம் பெரிய வளங்கள் உள்ளன, நாங்கள் இன்னும் தீவிரமாக செயல்படத் தொடங்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

உலக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோசா கடந்த ஆண்டு கேப்டவுன் அருகே உள்ள கடற்படை தளத்தில் இருந்து ரஷ்ய கப்பல் ஆயுதங்களை சேகரித்ததாக அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை நியமித்துள்ளதாக அமெரிக்க அரச தரப்புக்கள் தெரிவித்திருந்தன.

போருக்கான ஆளில்லா விமானங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை ரஷ்யாவிற்கு வழங்குவதில் ஈரான் உடைய பங்கு காரணமாக ஈரானுக்கு 50 ஆண்டுகளாக தடை விதிக்க உக்ரைன் நாடாளுமன்றத்திடம் அதிபர் ஜெலென்ஸ்கி கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

ரஷ்ய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான எதிர் தாக்குதலுக்கு வழி வகுக்கும் பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன என்று உக்ரைன் அதிபரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

“நம்முடையதை திரும்பப் பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது.” என சனிக்கிழமையன்று டெலிகிராம் செய்தியிடல் செயலியில் ஜலுஷ்னியின் அறிவிப்புடன், ஆயுதம் ஏந்திய உக்ரேனிய வீரர்கள் போருக்குத் தயாராகி வருவதைக் காட்டும் காணொளியும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.