;
Athirady Tamil News

கொழும்பு கொலன்னாவை பகுதியில் 8,000 தொன் குப்பைகள்

0

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் குவிந்துள்ள குப்பைகள் சுமார் 10 நாட்களுக்குள் முழுமையாக அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் கொலன்னாவை பகுதியில் மாத்திரம் சுமார் 8,000 தொன் குப்பைகள் குவிந்துள்ளதாகவும், சுமார் 2 நாட்களில் அதை அகற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா போன்ற பகுதிகளில் சுமார் 10,000 முதல் 12,000 தொன் குப்பைகள் குவிந்துள்ளன.

மேலும், தற்போது, மேல் மாகாண சுற்றாடல் அதிகாரசபை நாள் ஒன்றிற்கு சுமார் 100 லொரிகளை அனுப்பி மிகவும் வெற்றிகரமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.