இந்திய-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவைகள் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை!!
இந்திய-இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவைகள் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை வெளியிட்டார்.
சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையேயான அலையன்ஸ் எயர் மூலம் இயக்கப்படும் 100 வது விமானச் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், இந்தியா மற்றும் இலங்கை இடையே தொடர்பினை பேணுவதற்கு போக்குவரத்து மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் அந்த போக்குவரத்தை மேம்படுத்த இரு நாட்டு அரசுகளும் முயற்சிக்கிறது – என்றார்.