கனடாவில் 45 ஆயிரம் ஏக்கர் காடுகளை சேதமாக்கிய காட்டுத்தீ !!
கனடாவில் இதற்கு முன் இதுவரை இல்லாத அளவிற்கு காடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. ஒரு இடத்தில் பற்றிய தீயை அணைப்பதற்குள் அடுத்த இடத்தில் தீப்பிடித்து எரிகிறது. இதனால் தீயணைப்புத்துறை அதிரிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வர திணறி வருகிறார்கள். இந்த வருடத்தில் தற்போது வரை 2405 முறை தீப்பிடித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை 431 இடங்களில் தீப்பிடித்திருந்தது. நேற்று அது 422 ஆக குறைந்துள்ளது.
இருந்தாலும் புதிதாக 10 இடங்களில் தீப்பிடித்துள்ளது. கனடாவின் மேற்கு பகுதியில் நிலையற்ற சூழ்நிலை நிலவுவதால் மீண்டும் தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. வெப்பநிலை மற்றும் வெப்பக்காற்று வீசுவதால் மோசமான காட்டுத்தீயை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீவிபத்தில் 45 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் காடுகள் சேதமடைந்துள்ளன.