;
Athirady Tamil News

மரநடுகை திட்டத்தில் பங்காற்றியவர்களுக்கு சூழகம் அமைப்பினரால் உலருணவு பொதி வழங்கல்

0

சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ஏற்பாட்டில் ( சூழகம் ) புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் வீதியிலிருந்து புங்குடுதீவு குறிச்சுக்காடு சந்தி வரையிலான பல கிலோமீட்டர் நீளமான வீதியில் வனவள பரிபாலன திணைக்களத்தினால் நவம்பர் மாதம் நடுகை செய்யப்பட்ட 175 மரக்கன்றுகளை மீளவும் பராமரிக்கும் செயற்பாடு அண்மையில் சூழகம் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது.

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மர பாதுகாப்பு கூடுகளும் மற்றும் கால்நடைகளால் பாதிக்கப்பட்ட மர பாதுகாப்பு கூடுகளும் மறுசீரமைக்கப்பட்டதோடு மேலும் பத்து மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டு பாதுகாப்பு கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற இச்செயற்பாடுகளில் இணைந்து செயலாற்றியவர்களுக்கு நுளம்பு வலைகள் மற்றும் உலருணவு, சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்திற்கான நிதியுதவியாக புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த திரு. சின்னத்தம்பி நகுலேஸ்வரன் (சுவிஸ்) அவர்கள் 50000 ரூபாயினையும் , ஜனநாயக தமிழரசுக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்கள் 25000 ரூபாவினையும் , சூழகம் அமைப்பின் உப தலைவர் திரு. கருணாகரன் குணாளன் அவர்கள் 25000 ரூபாவினையும் வழங்கியிருந்தனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.