;
Athirady Tamil News

டொனால்ட் ட்ரம்ப் சிறை செல்ல வாய்ப்பு..!

0

அமெரிக்காவின் அணு ஆயுத திட்டங்கள், உள்ளிட்ட ஆவணங்கள் அண்மையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டது.

இந்த ஆவண விவகாரம் தொடர்பில் 7 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு நேற்றையதினம் அமெரிக்காவின் மியாமி நிதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விவகாரத்தில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். ஆனால் தனது பதவி காலத்தில் கையாண்ட ஆவணங்களை ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்காமல் அவற்றை தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களை ட்ரம்ப் வைத்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள ட்ரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு 100-க்கும் மேற்பட்ட இரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அமெரிக்காவின் அணு சக்தி திட்டங்கள், அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளின் பாதுகாப்பு, ஆயுத திறன்கள், இராணுவ தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் சாத்தியக் கூறுகள் வெளி நாட்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் ஆகியவை தொடர்பான இரகசிய ஆவணங்கள் இருந்ததாக பரபரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த 100-க்கும் மேற்பட்ட இரகசிய ஆவணங்கள் மற்றும் 11 ஆயிரம் அரசாங்க ஆவணங்கள் ட்ரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் அறையில் பாதுகாப்பற்ற முறையில் வைத்து கையாண்டதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் பொய் கூறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக எதிர்வரும் 13- ஆம் திகதி மியாமி நீதிமன்றத்தில் ட்ரம்ப் நேரில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.