;
Athirady Tamil News

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற சினிமா கேமராமேன் கைது!!

0

கேரள மாநிலம் கோட்டயம், முண்டக்கயம் பகுதியை சேர்ந்தவர் சுகைல் (வயது 28). இவர் நீல வெளிச்சம், சதுரம் உள்பட மலையாள திரைப்படங்களில் துணை கேமராமேனாக பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் சுகைலின் வீட்டிற்கு நேற்று முன்தினம் கோட்டயம், கலால் பிரிவு போலீசார் திடீரென சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 220 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சுகைல் கைவசம் இருந்த 50 கிராம் கஞ்சாவும், எலக்ட்ரானிக் தராசும் கைப்பற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சுகைலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும், 50 கிராம் கஞ்சா பொட்டலத்தை ரூ.2 ஆயிரத்திற்கு விற்றதும் தெரிய வந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.