;
Athirady Tamil News

ஜோ பைடன் மோடிக்கு அளித்த விருந்தில் இடம் பிடித்த உணவு வகைகள்!!

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசு முறை பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வெள்ளை மாளிகை சென்ற அவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்- அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் விருந்து அளித்தனர். Powered By VDO.AI Video Player is loading.

அவருக்கான விருந்தில் இடம் பெறும் பிரத்யேக உணவு வகைகள்:- முதல் பரிமாற்றம்: உப்பு நீரில் பதப்படுத்தப்பட்ட தினை (marinated millet) வறுக்கப்பட்ட சோளவிதை சாலட் (grilled corn kernel salad) அழுத்தப்பட்ட தர்பூசணி (compressed watermelon) இனிப்பு கலந்த வெண்ணெய்பழ சாஸ் (tangy avocado sauce) இரண்டாவது பரிமாற்றம்: ஸ்டஃப்ட் போர்டோபெல்லோ காளான் (stuffed portobello mushroom) குங்குமப்பூ சேர்க்கப்பட்ட பாலேட்டு ரிஸோட்டோ (creamy saffron-infused risotto) சுமாக் கலந்த வறுக்கப்பட்ட கடல் பாஸ் (sumac roasted sea bass) லெமன்-டில் தயிர் சாஸ் (lemon-dill yogurt sauce) இணை பரிமாற்றங்கள்: மிருதுவாக்கப்பட்ட தினை கேக் (crisped millet cakes) கோடைக்கால குளிர்பானம் (summer squashes) இந்திய மற்றும் அமெரிக்க சமையற்கலைகளின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த உணவு வகைகளை தலைமை சமையல் கலைஞர் நினா கர்டிஸ், வெள்ளை மாளிகை தலைமை சமையல் கலைஞர் க்ரிஸ் கோமெர்ஃபோர்ட், வெள்ளை மாளிகை தலைமை சமையல் கலைஞர் சுஸி மாரிஸன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

முன்னதாக பேசிய அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன், மோடி சைவ உணவு வகைகளை மட்டுமே உண்பவர் எனபதால், தாவரங்களைக் கொண்டு சமைப்பதில் வல்லுனரான நினா கர்டிஸ் அவர்களை வெள்ளை மாளிகை உணவு கலைஞர்களுடன் இணைந்து சிறப்பாக தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், இருப்பினும் மற்ற விருந்தினர்கள் விரும்பினால் உண்பதற்காக மீன் சார்ந்த உணவு வகைகள் விருந்தில் இடம் பெறுகிறது எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.