;
Athirady Tamil News

ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்?

0

இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச நிதி ஒப்பந்த மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். இந்தப் பயணத்தை முடித்துவிட்டு தாயகம் திரும்பி உள்ளார்.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிநவீன துப்பாக்கி மூலமோ, வேறு வடிவிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விக்ரமசிங்க செல்லும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட ரகசிய தகவலை ஊடகத்திற்கு பகிரப்பட்டது எப்படி என விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 இல் இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அந்நாட்டு மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சியை இழந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.