;
Athirady Tamil News

பிரித்தானியாவில் கோரவிபத்தில் சிக்கி உயிரிழந்த யாழ்ப்பாண பெண்கள் – உறவினர்கள் வெளியிட்ட அறிவிப்பு !!

0

பிரித்தானியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த யாழ்ப்பாண பெண்களின் இறுதிக்கிரியைகள் கனடாவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 9 ஆம் திகதி கனடாவில் மார்க்கத்தில் உள்ள ஐலன்ஸ் ஹில் மலர்சாலையில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரித்தானியாவின் தென் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரண்டு கார்கள் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று பெண்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பெண்களும், காரை செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் உறவினரான பெண் ஒருவரும் உயிரிழந்தனர்.

திருமணக் கொண்டாட்டம் ஒன்றுக்காக கனடாவில் இருந்து பிரித்தானியா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தமிழ் பெண்களான தாயும், மகளுமே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.