;
Athirady Tamil News

நீராவி என்ஜின் வடிவில் சுற்றுலா ரெயில்!!

0

தெற்கு ரயில்வேயின், திருச்சி பொன் மலை, பெரம்பூர் கேரேஜ், ஆவடி பணி மனை இணைந்து, நீராவி ரெயில் என்ஜின் வடிவில், மின்சாரத்தில் இயங்கும் சுற்றுலா ரெயிலை வடிவமைத்துள்ளனர். இந்த ரெயிலை மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலை யத்தில், சமீபத்தில் பார்வையிட்டார். இந்த சுற்றுலா ரெயிலில் 3 சொகுசு ஏ.சி. பெட்டி, ஒரு பேன்டரி ஏ.சி. பெட்டியும் இருக்கும். சொகுசு இருக்கைகள், சுற்றுலா இடங்களை காணும் வகையில் கண்ணாடி மேற்கூரை ஆகியவையும் இருக்கும். அதிநவீன கழிப்பிட வசதி, பெரிய ஜன்னல்கள், மொபைல் போன் சார்ஜிங் வசதி, அவசரகால கதவுகள், வண்ண வண்ண நிறங்களில் உள்அலங்காரம், அடுத்த நிறுத்தம் மற்றும் ரெயிலின் வேகம் உள்ளிட்ட தகவல் அளிக்க டிஜிட்டல் திரைகள், ஒரு பெட்டியில் இருந்து மற்றொரு பெட்டிக்கு செல்லும் வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

நீராவி புகை வெளியேறுவது போல், ஹாரன் ஒலித்தபடி, ஓடும் இந்த சுற்றுலா ரெயில், பயணியரிடம் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த ரெயிலின் சோதனை ஒட்டம் சென்னை – புதுவை இடையே இன்று நடத்தது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட ரெயிலில் தெற்கு ரெயில்வே பொது மேலா ளர் ஆர்.என்.சிங் உள் ளிட்ட அதிகாரிகள் பயணம் செய்தனர். மதியம் 12.30 மணியளவில் புதுவை ரெயில்வே நிலையத்தை வந்தடைந்தது. அங்கு பொதுமேலாளர் ஆர்.என். சிங்கை புதுவை ரெயில்வே அதிகாரிகள் வரவேற்றனர்.

தொடர்ந்து ரெயிலில் பயணம் செய்து வந்த அதிகாரிகள் புதுவை ரெயில் நிலையம் மற்றும் அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டனர். புதுவை ரெயில் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மதிய உணவிற்கு பிறகு மீண்டும் 2.30 மணிக்கு சுற்றுலா ரெயிலில் சென்னை திரும்ப புறப்பட்டனர். சோதனை ஒட்டத்தில் சுற்றுலா ரெயிலின் வேகம், ரெயில் நிறுத்தங்களை தேர்வு செய்வது, எவ்வளவு நேரத்தில் புதுவைக்கு செல்கிறது உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப் பட்டுள்ளது. சென்னை – புதுவை தடத்தில் சுற்றுலா ரெயில் இயக்குவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.