;
Athirady Tamil News

யாழ்.திருநெல்வேலி மரக்கறி சந்தையில் ”உண்மையான” உரிமையாளர்கள்” சந்தித்த அதிர்ச்சி! (PHOTOS)

0

யாழ்.திருநெல்வேலி மரக்கறி சந்தையில் ”உண்மையான” உரிமையாளர்கள்” சந்தித்த அதிர்ச்சி!

”முடிந்தால் பிடியுங்கோ!” ”மாஃபியா” வர்த்தகர்கள் சவால்…..

யாழ்.மாவட்டத்தில் சந்தைகளில் விவசாயிகளிடம் 10% கழிவுகள் அறவிடக்கூடாதென்று யாழ். மாவட்டச்செயலகம் முதல் உள்ளாட்சி சபைகள் வரை தீர்மானம் மேற்கொண்டுள்ளன.

ஆனால் விவசாய சந்தைகளில் இது அமுல்படுத்தப்படாமல் விவசாயிகளிடம் 10% கழிவு மேற்கொள்ளப்பட்டு விவசாய உற்பத்திகள் ஒருசில மாஃபியா வர்த்தகர்களால் மொத்த விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு பின்னர் கடும் இலாபத்தில் சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பின்னர் அவர்களின் இலாபத்தின் பின்னர் பொதுமக்களுக்கு அறா விலையில்சுமார் மூன்று நான்கு மடங்கு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதை தடுக்கும் நோக்கில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.சிவபாலசுந்தரன் அவர்களின் உத்தரவின் பேரில் நல்லூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே/110 திருநெல்வேலி மேற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி மரக்கறி சந்தையில் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி எழிலரசி.அன்ரன் யோகநாயகம், மற்றும் பிரிவின் கிராம அலுவலர் செல்வி. லக்‌ஷிகா பரமலிங்கம் மற்றும் பிரிவின் பொருளாதார உத்தியோகத்தர் ஜெனின் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் பு.ஜெலீபன் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் நேற்றுஅதிகாலை சுமார் 05 மணியளவில் அதிரடி ஆய்வினை மேற்கொண்டனர்.

ஆயினும் பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியவற்றின் உத்தரவுகளை, அவர்களின் முன்னே காற்றில் பறக்க விட்ட சந்தையின் மொத்த வியாபாரிகளாக உருவெடுத்துள்ள சில மாஃபியா வியாபாரிகள்

“உங்களை கேட்டு வியாபாரம் செய்ய முடியாது. உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் இங்கே 10% கழிவு செய்து தான் எடுப்போம். முடிந்தால் பிடியுங்கோ” என

நல்லூர் பிரதேச செயலாளரிடம் மற்றும் யாழ்.திருநெல்வேலி மரக்கறி சந்தையின் “உண்மையான” உரிமையாளரான நல்லூர் பிரதேச சபையின் செயலாளரான பு. ஜெலீபன் அவர்களிடம் பகிரங்கமாக சவாலாக தெரிவித்தனர்.

ஆனாலும் விவசாயிகளின் ஒத்துழைப்பு இன்மை காரணமாக எந்த வித முறைப்பாடுகளும் இல்லாத நிலையில் எவ்வித, நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் கைகள் கட்டப்பட்டுள்ளேன் ஆனால். 2024 தை மாதம் முதல் பிரதேச சபை நடவடிகை எடுக்கும் என நல்லூர் பிரதேச சபையின் செயலாளரான பு. ஜெலீபன் அவர்கள் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.