;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் மாநகர சபை: பிரஜா சக்தி திட்டத்திற்கு எதிரான பிரேரணை பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரஜா சக்தி திட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாண மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு இன்று (16) மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது பிரதி முதல்வர் இ.தயாளனால் பிரஜா சக்திக்கு எதிரான பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது.

குறித்த பிரேரணைக்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நிலையில், ஏனைய உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.