திருமண பத்திரிகை கொடுக்கச்சென்ற புதுமாப்பிள்ளை ரெயிலில் சிக்கி பலி!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே உள்ள அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த சிரில்-புஷ்பத்தா தம்பதியரின் மகன் வின்சென்ட் சிரில்(வயது36). மீனவரான இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது திருமணம் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் வருகிற 17-ந்தேதி நடக்க இருந்தது. வின்சென்டின் பெற்றோர் உடல் நலம் பாதித்தவர்கள் என்பதால், உறவினர்களுக்கு திருமண பத்திரிகைகளை, அவரே நேரில் சென்று கொடுத்து வந்தார்.
அதன்படி கொல்லத்துக்கு சென்றிருந்தார். அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த எர்நாடு எக்ஸ்பிரஸ், வின்சென்ட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். திருமணம் நடக்க சில நாட்களே உள்ள நிலையில், வின்சென்ட் ரெயில் மோதி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.