;
Athirady Tamil News

மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா? (PHOTOS)

0

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் முதலீடுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் நனாட்டான் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்கு அண்மையிலும் பறவைகள் சரணாலயத்திற்குள்ளும் நிறுவப்பட்டுள்ள காற்றாலை உற்பத்திக்கு 15MW WIND POWER PROJECT [HIRURAS POWER PVT.LTD] மக்கள் ஆரம்பத்திலிருந்து தமது எதிர்பினை தெருவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 15MW WIND POWER PROJECT கொண்ட நிலையத்தினை மக்கள் குடியிருப்புக்கள் அற்ற இடத்தில் மேற்கொள்ளுமாறு பல அரச அதிகாரிகள் ஊடாக தெரியப்படுத்தியும் அவ் உரிய அதிகாரிகள் கவனம் எடுக்காத நிலை தொடர்ச்சியாக காணப்பட்டுள்ளது.

06.08.2023 அமைச்சர் காஞ்சன விஜெயசேகர அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டமை முக்கியமானவிடயமாகும்.

மக்கள் தமது பிரச்சனைகளை பிரதேச செயலாளர் முதல் அரசாங்க அதிபர் வரை தெரியப்படுத்தியும் ஏன் இதனை தவிர்க்க முடியவில்லை என்ற தமது ஆதங்களை கவனயீர்பு ஆர்பாட்டத்தின் மூலம் நேற்று தெரியப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடவேண்டியது.

மன்னார் மாவட்டமானது ஆளுமையற்ற அரச உயர் அதிகாரிகளையும் மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொண்டதாகவும் மக்களை விழிப்பூட்டுவதற்கும் சரியான இடங்களில் முதலீடுகளை நிறுவுவதற்கான தெளிவுகளை வழங்கமுடியாத திணைக்கள தலைவர்களை கொண்ட மாவட்ட மாகாக் காணப்படுகின்றமையும், வன்னி தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் அசமந்த போக்கு ஏனைய மாவட்டங்களை விட அதிகமாகவும் மக்களினை தொடர்ச்சியாக பிரச்சனைகளுக்குள் சிக்கித்தவிர்க்கும் சூழலினையினையே தோற்றிவிப்பதாகக் காணப்பவதாக மக்கள் தெருவித்தார்கள்.

பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் ஏன் பதில் அளிக்க மறுக்கின்றனர் என்பதும் மக்களது வாதமாகக் காணப்படுகின்றமையும் மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பாரிய முதலீடுகள் தொடர்பாக எவ்விதமான அறிவுகள் அற்ற நிலையில் செயற்படுகின்றார்களா? அபிவிருத்திக் குழுகூட்டத்திற்கு செலவழிக்கப்படும் மக்களது வரிப்பணங்கள் வீணாக்கப்படுகின்றனவா? உண்மையில் மன்னார் மாவட்டத்தில் நடப்பவை என்ன? மிக குறுகிய சனத்தொகையினை கொண்ட மாவட்டத்தின் அரச அதிகாரிகள் ஏன் பதிலளிக்க மறுக்கின்றனர்? என சாதாரண மக்கள் சிந்திக்கும் நிலை காணப்படுகின்றது.

முதலீடுகளை சரியாக பிரதேசத்தில் மேற்கொள்வதால் முதலீட்டாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் எதிர்ப்புக்கள் ஏற்படுவதனையும் வீண் செலவுகள் மற்றும் ஊழல் – சுரண்டல்களை தவிர்க்க முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.