;
Athirady Tamil News

ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ: 36 பேர் பலி- வீடுகள் எரிந்து சாம்பல்!!

0

அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்று மவுயி தீவு. இங்கு பயங்கர காட்டுத் தீ பரவியுள்ளது. பிரபல சுற்றுலா நகரமான அங்கு லஹைனா பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 12 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீயில் இருந்து தப்பிக்க சிலர் கடலில் குதித்தனர். வேகமாக பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர். பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

ஏராளமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது. மவுயி தீவில் உள்ள விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தீவுக்கு சுற்றுலா வந்த 2 ஆயிரம் பேருக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களை தங்க வைக்க ஹவாய் மாநாட்டு மையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மீட்புப் பணிக்கு உதவ ராணுவத்தை அனுப்ப அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டு உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.