;
Athirady Tamil News

மூன்று நிமிடத்தில் திடீரென 15 ஆயிரம் அடி தரையிறங்கிய விமானம் – அச்சத்தில் பயணிகள் !!

0

அமெரிக்காவில் பயணிகள் விமானமொன்று பறப்பை மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென மூன்று நிமிடங்களில் 15,000 அடிக்கு மேலிருந்தது தரை இறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புளோரிடாவிற்குச் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமே இவ்வாறு திடீரென தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானம் அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள சார்லோட்டிலிருந்து புளோரிடாவின் கெய்னெஸ்வில்லிக்கு சென்றது. அப்போது “சாத்தியமான அழுத்த பிரச்சினை” காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்தது.

விமானத்தில் பயணித்தவரும், புளோரிடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஹாரிசன் ஹோவ் சமூக ஊடகங்களில் தனக்கு நேர்ந்த துயரத்தை விவரித்தார். இந்த சம்பவம் “பயங்கரமானது” என்றும், “எரியும் நாற்றம், உரத்த இடி ஆகியவற்றை புகைப்படங்களால் மிகச்சரியாக உணர்த்த முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Flight Aware பகிர்ந்த தரவுகளில், விமானம் 11 நிமிடங்களில் கிட்டத்தட்ட 20,000 அடி கீழே இறக்கப்பட்டது. பயணம் தொடங்கிய 43 நிமிடங்களுக்குப் பிறகு விமானம் 6 நிமிடங்களுக்குள் 18,600 அடி கீழே இறங்கியது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பொக்ஸ் நியூஸுக்கு அளித்த அறிக்கையில், அழுத்தப் பிரச்சனை காரணமாக குறைந்த உயரத்தில் விமானக் குழுவினர் பாதுகாப்பாக இறங்க முடிவு செய்ததாகக் கூறியது.

“அமெரிக்கன் ஈகிள் விமானம் 5916, சார்லோட்டிலிருந்து (CLT) புளோரிடாவின் Gainesville வரை (GNV) ஓகஸ்ட் 10, வியாழன் அன்று பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்தபோது, பணியாளர்கள் அழுத்தம் குறைவதற்கான அறிகுறியைப் பெற்றனர், உடனடியாகவும் பாதுகாப்பாகவும் குறைந்த உயரத்தில் தரை இறங்கினர். எங்கள் வாடிக்கையாளர்களின் சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் எங்கள் குழுவின் தொழில்முறைக்கு நன்றி” என்று அதன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.