;
Athirady Tamil News

1200 அடி உயரத்தில் ஊசலாடிய கேபிள் கார் – 14 மணி நேரத்துக்கு பின் குழந்தைகள் உள்பட 8 பேரும் மீட்பு!!

0

பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளைக் கடக்க பாலங்கள் அமைக்க முடியாததால், மக்கள் ஒரு மலையிலிருந்து எதிரே உள்ள மலைக்கு அந்தரத்தில் கேபிள் கார் எனப்படும் ஒரு கயிறின் மூலமாக இயக்கப்படும் சிறு வாகனத்தில் அமர்ந்து பயணம் செய்கின்றனர்.

குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல கேபிள் கார் மூலமாக ஒரு மலைப்பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், நேற்று காலை 7 மணியளவில் 6 குழந்தைகள், 2 பெரியவர்கள் என மொத்தம் 8 பேர் ஒரு கேபிள் காரில் பயணம் செய்தனர். தரையில் இருந்து சுமார் 1,200 அடிக்கு மேலே அது செல்லும்போது கயிறு திடீரென அறுந்தது. இதனால் அந்த கேபிள் கார் பயணிகளுடன் அந்தரத்தில் ஊசலாட தொடங்கியது. இந்நிலையில், 14 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தைகள் உள்பட 8 பேரும் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர் என தற்காலிக பிரதமர் அன்வர் உல் ஹக் ககர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.